கடந்த இரு தினங்களிற்கு முன்னர் மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் தரிக்காது சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிபிரயோகம் நடத்தியிருந்தனர்.
குறித்த வாகனத்தில் பயணம் செய்த இரு பொலிஸ் அலுவலகர்களுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஆட்கடத்தல் மன்னனும் மற்றும் பல கொலைகளை மஹிந்த மற்றும் கோத்தபாயவிற்காக செய்தவருமான இனிய பாரதி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார்.
இதன்போது குறித்த சொகுசு வாகனத்தில் இருந்து 164 கிலோ கேரள கஞ்சாவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இதேவேளை கே.புஸ்பகுமார் எனும் (இனியபாரதி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக செயற்பட்டவர் ஆவார்.
தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து கருணா குழுவாக பிரிந்தபோது இவரது கையில் ஒரு சதமும் இருக்கவில்லை .
ஆனால் கடந்த வருடம் அம்பாறை அருகம்பே பகுதியில் ஏழு கோடி ரூபாய் மதிப்பு மிக்க ஹோட்டல் ஒன்றினை தற்பொழுது இவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது .
இதுபோன்று பல கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி மிக்க சொத்துக்களும் அவரிடம் இருப்பதாக பேசப்படுகின்றது.
இந்த நிலையில் அவருக்கு எப்படி உரித்தாகியதென்று சி.ஐ.டி யினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .
இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றால் இவரும் இவரது தலைவர் பிள்ளையானும் வெளியில் வந்து ஆடப்போகிற ஆட்டம் சும்மா இல்லை என கிழக்கு சமூகாஅர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .
எனவே கிழக்கு மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இவனுக்கெல்லாம் யார் கலாநிதி பட்டம் கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பிய வலைத்தள வாசிகள் மகிந்த ஆட்சியில் எதுவேண்டும் என்றாலும் அதனை காசு கொடுத்து வாங்கலாம் தானே எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் கருணாவின் சகாவான இனியபாரதி சிறுவர்களை கடத்தும் ஆயுத குழு என ஐக்கிய நாடுகள் சபையினால் பெயரிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






