யாழிற்கு வந்த ஐரோப்பிய மாமன் செய்த கேவலமான செயல்! பலிக்கடா ஆன ஆசிரியர்

யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரம் கற்கும் குறித்த மாணவி தொடர் வாந்தி காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மாணவி கர்ப்பமான விடயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

தன்னைக் கர்ப்பமாக்கியவர் யார் என்பதை முதலில் பெற்றோருக்கு தெரிவிக்க மாணவி மறுத்துள்ளார்.

அதன் பின்னர் மாணவிக்கு வீட்டில் வந்து தனிப்பட்ட ரீதியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர் சந்தேகப்பட்டுள்ளனர்.

அதோடு குறித்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்திய அவர்கள் பொலிஸாரிடம் முறையிட முற்பட்ட போதே ஐரோப்பிய நாடொன்றில் இருந்து தனது மகளிற்கு பூப்புனித நீராட்டுவதற்காக வந்த அத்தையின் 45 வயதான கணவர் செய்த கேவலமான செயல் என மாணவி உண்மையை கூறியுள்ளார்.

எனினும் அதனை நம்பாத பெற்றோர் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று முறையற்ற நடவடிக்கை மேற்கொண்டதால் இளம் குடும்பஸ்தரான ஆசிரியர் பெரும் அவமானத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அத்துடன் ஆசிரியரின் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரால் அவர் கடும் அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், ஆசிரியரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாணவியின் பெற்றோர் தற்போதும் மாணவி கூறுவதை நம்பாமல் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like