யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களுக்கு உதவவேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களுக்கு உதவவேண்டும் அவுஸ்திரேலிய பிரதிநிதியிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவுவதற்கு அவுஸ்திரேலியா முன்வரவேண்டும் என்று அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினரும் சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான ஆசியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் உபதலைவருமான அன் சுட்மலிஸிடம் சிறுவர் விவகார இரா¬ஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான ஆசிய பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் 12 ஆவது மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 7ஆம் திகதி சனிக்கிழமையும், 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சிறுவர் விவ¬கார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜ¬ய¬கலா மகேஸ்வரன் நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.

ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இங்கு கருத்துத் தெரி-வித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் வரையில் அங்கவீனமுற்றுள்ளனர். 10 ஆயிரம் சிறுவர்கள் வரையில் அநாதரவாகியுள்ளனர். 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் உரிய வாழ்வாதார வசதிகளின்றி கஷ்டப்படுகின்றனர்.

இவ்-வாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவிகளை வழங்கவேண்டும்.
மலையகத்திலும் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப-வேண்டியுள்ளது. யுத்தத்தையடுத்து வடக்கு, கிழக்கில் கல்வி நடவடிக்கை பின்தங்கியுள்-ளது. சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாது தொழிலுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்-ளது.

கிழக்கிலும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. வயதை குறைத்து காண்பித்து வேலைக்கு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. இதற்கெல்லாம் வறுமையும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் உதவவேண்டியுள்ளது. பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் சுயதொழில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் உதவிகளை வழங்கவேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஐந்துவீதமான பெண் பிரதிநிதித்துவமே காணப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைகளில் 25 வீதமாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெண் பிரதிநிதிகள் இரண்டாவது தடவையாக வெற்றிபெற முடியாத நிலைமையும் காணப்படுகின்றது. அவ்வாறு பெண்கள் அரசியலுக்கு வந்-தாலும் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலையத்தளங்கள் அந்தப் பெண் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக அவதூறுகளைப் பரப்பும் நிலைமை காணப்படுகின்றது.

ஊடகத்துறையானது நடுநிலைமையுடன் செயற்பட வேண்டும். ஆனால் சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பெண் பிரதிநிதித்துவங்களை இல்லாது செய்யும் வகையில் செயற்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் அன் சுட்மலிஸை நேற்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்த இராஜாங்க அமைச்சர் வடக்கு, கிழக்கு பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த மகஜர் ஒன்றை அவரிடம் கையளித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like