ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித்தின் தாயின் பதை.. பதைக்கும் நிமிடங்கள்….

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

ஆழ்துளை கிணற்றில் 25.10.2019 மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 78 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் தொடர்ந்து 53 மணி நேரமாக மீட்புப்பணி தொடர்கிறது.

பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உதயகுமார் உள்ளிட்ளோர் களத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்திய நிலையில் திருச்சி மாவட்ட திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.

நேருவும் சென்று மீட்பு பணிகளை குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் கரூர் எம்.பி ஜோதிமணி சுர்ஜித்தின் வீட்டிற்கு சென்று குழந்தைக்கா தவிப்பில் மயங்கிய நிலையில் இருந்த தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

வீட்டின் உள்ளே சுர்ஜித் அம்மா குழந்தை நினைத்து அழுத்து படுத்தபடுக்கையான மயங்கி இருந்த நிலையில் அவரை சந்தித்து ஆறுதல் சொன்னார்.

அப்போது சுர்ஜித் அம்மா ஜோதிமணியிடம் “என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தந்துவிடுங்கள்” என்று ஜோதிமணியிடம் தாயார் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். அதற்கு ஜோதிமணி, சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான் என்று அவருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், கனத்த இதயத்துடன் நின்று கொண்டு இருக்கிறோம். குழந்தையை மட்டும் மீட்டுக்கொடுத்துவிடுங்கள் என பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர். எப்படியும் குழந்தையை மீட்டு தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

அதையும் கடந்து குழந்தை சுர்ஜித்தின் தாய் தன் நிலை மறந்து குழந்தைக்காக ஏங்கி பதை.. பதைக்கும் நிலை பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடந்து செல்வதால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விடுகிறது. தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பிரத்யேக கருவியை வடிவமைக்க மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.