கோட்டாபயவின் யாழ் பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் உரையாற்றும்போது கரவெட்டி பிரதேசசபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் உளறிக்கொட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்றையதினம் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாயவின் பிரச்சார கூட்டம் யாழில் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய கரவெட்டி பிரதேசசபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் வடமாகாண ஆளுனர் ஒருவர் திறமையற்றவர் இருக்கிறார்.
அவர் என்ன செய்கிறார்? லண்டனிற்கும் கனடாவிற்கும் சென்று டான்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னர் இருந்தவர்களும் திறமையற்றவர்கள் என உளறியுள்ளார்.
அத்துடன் வடமாகாணத்தில் முதல் ஒரு மந்திரியிருந்ததாகவும், அவர் பேப்பர்களை பாஸ் பண்ணினார். அவை குப்பைக்கு போனது. அதை அகற்ற காசு வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நாங்கள் வெற்றியடைவோம். 17ம் திகதி சத்தியப்பிரமாணம் எடுப்போம் என்றும் கூறிய அவர், அன்று தொடக்கம் அங்கஜன் இராமநாதனின் உயர்மட்ட குழு பாதுகாப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை யாழில் இடம்பெற்று வரும் கோத்தபாயவின் பிரச்சார கூட்டத்தினை வடமாகாண முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் கூரே தலைமைதாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






