சுஜித் இறப்பதற்கு ஒரு நாள் முன் மிக முக்கிய பெண் கூறிய திடுக்கிடும் தகவல்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நடக்கும் விளைவு குறித்து கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து வெளியிட்டிருந்தார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட அவர்,

சுஜித்தை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகே ரிக் இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. பாறைகள் இருப்பதால் பணி சற்று தாமதமாக நடந்து வருகிறது.

பிளான் பி இல்லாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது எனவும் இயந்திரத்தால் முடியாத பட்சத்தில் மீட்பு குழுவிடம் மாற்றுவழி இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இயந்திரம் மூலம் மீட்பு பணியை தொடர்வது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும் என்றும் முதல்வர் உடனடியாக தலையிட்டு மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், மீட்பு பணி தோல்வியுற்றால் மக்களுக்கு அரசு மீது அவநம்பிக்கை ஏற்படும் எனவும் எல்லாவற்றையும் தாண்டி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை உயிரிழந்த சுஜித் உடல் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.