அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்படுவதாகக் கடந்த நாட்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்பட்டால் அதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like