கொழும்பு பிரபல ஹோட்டலில் தமிழிற்கு நேர்ந்த கதி! நடந்தது என்ன! பகீர் தகவல்

கொழும்பில் இயங்கும் தனியார் உணவகம் ஒன்றில் தமிழ் மொழியில் பேசக் கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்ட விவகாரம் சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியியிருந்தது.

கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள Peppermint Café எனும் பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

உணவகத்தின் இந்த செயற்பாடு தொடர்பில் கண்டனங்கள் எழுந்ததுடன் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக அது மாறியிருந்தது.

இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்திருந்த இணையவாசிகள் இனவாதம் வெளிப்படுத்தும் அந்த தனியார் உணவகத்தை நிராகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோள் சமூகவலைத்தளங்களில் பல சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச மட்டத்தில் உயர் பெறுபேறுகளைக்கொண்டிருந்த அந்த உணவகத்தின் நட்சத்திர நிலை திடீரென்று குறைவடைந்துள்ளது.

இலங்கை, தமிழ் நாடு, மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இனவாதத்திற்கு எதிரானவர்களின் அதிரடியான செயற்பாடுகளால், அந்த உணவகத்தின் நிர்வாகிகள் தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தற்பொழுது தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக அந்த உணவகம், அது பிறிண்டரினால் ஏற்பட்ட பிழை என பகிரங்கமாக மன்னிப்புகோரி விளக்கம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.