பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஜய்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்

விஜய் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு 25ஆம் தேதி வெளிவந்த படம் தான் பிகில். ஏ.ஜி.ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டது. சென்ற வாரம் வெளிவந்த இந்த படம் பாக்ஸ் ஆஃபீசில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

மேலும் இந்த படம் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து நடிகைகள் இந்துஜா, வர்ஷா, அமிர்த, இந்திரஜா, மற்றும் பல பெண்களும் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர். இவர்களில் முக்கியமாக ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் படத்தில் ஒரு காட்சியில் விஜய் இந்திரஜாவின் தோற்றத்தை வைத்து ‘குண்டம்மா’ என்று அழைப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. விஜய் ஏன் ஒருவரின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தார் என்று சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் இணையத்தளத்தில் விஜய்க்கு எதிராக பரவலாகி வருகிறது.

இதன்பின் இந்திரஜா ஒரு பெட்டியில் இதைப்பற்றி கேட்ட பொது, விஜய் அவர்கள் என்னை ‘குண்டம்மா’ என்று சொல்வதற்கு தயங்கினார். மேலும் அந்த படத்திற்கு முக்கியமான வசனம் என்று தான் விஜய் அவர்கள் நடித்தார். அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்காக மன்னிப்பு கேட்டார் என்று பேட்டியில் பதிவிட்டுள்ளார் இந்திரஜா.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like