வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிக்க முடிவு

எதிர்வரும் நவம்பர் நடக்கவுள்ள, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம், ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து, மாலை 5 மணிக்கு முடிவடையும் என்றும், அவர் கூறினார்.

35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்குச்சீட்டு 26 அங்குலம் நீளமானதாக உள்ளது, இதனைக் கருத்தில் கொண்டே வாக்களிப்பு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த யோசனைக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனவும், சமன் சிறி ரத்நாயக்க அறிவித்துள்ளார்.