யாழ் பிரபல மகளிர் கல்லூரிக்கு பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கடிதம்?

யாழ்ப்பாணம் வேம்படி இந்து மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமையால் அங்கு பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்ட்டுள்ளது.

அப்போது குறித்த கல்லூரியின் அதிபர் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்று தெரிவித்து அவரது வீட்டு முகவரி தபால் திணைக்கள உத்தியோகத்தரிடம் கொடுக்கப்ப்டுள்ளது.

அதன் படி கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் திருமதி ரேணுகா சண்முகரத்தினத்தின் வீட்டிற்கு அக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் அதிபர் அதனை வாசித்தபோது அந்தக் கடிதத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல பெண்கள் கல்லூரியாகக் காணப்படும் வேம்படி மகளிர் கல்லூரியில் அடுத்த மாதம் குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெறவுள்ளது.

இந்தத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் மேற்கொள்ளவுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விடையத்தை கல்லூரியின் தற்போதைய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார் அநாமதேய இந்தக் கடிதத்தினால் பாடசாலையின் ஆசிரியர் மாணவர்கள் இடையே பெரும் பதற்றநிலை காணப்பட்டது.

இதேவேளை நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருப்பதையெட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.