புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (வியாழக்கிழமை) காலை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்தார்.
இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, “புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப்போவதாக கூறினார்.
நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் செய்துகொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் தாம் கட்டுப்படவில்லை என்றும் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த உடன்பாடு குறித்தும் கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் அறிக்கை மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, கண்டி குயீன்ஸ் விடுதியில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இதில் ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முழுமையாக விஞ்ஞாபனம்,
Sajith Premadasa: Election … by Sri Lanka Guardian on Scribd