சுர்ஜித்தின் தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கு உறங்குகின்றான் என்று! வெளியான முக்கிய ஆதாரம்

தமிழகத்தில் இரண்டு வயது சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்தது.

இந் நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

குழிக்குள் வீழ்ந்த குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்காத நிலையில், அதிகாலை உயிரிழந்த நிலையில் குழந்தை மீட்டனர்.

இந்நிலையில் நேற்றிலிருந்து சுர்ஜித்தின் பெற்றோர் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் சுர்ஜித் விழுந்து இறந்த ஆழ்துளை கிணற்றிற்கு மாலை வைத்து, தாய் மற்றும் தந்தை அதன் அருகே மகனை பறிகொடுத்த வேதனையுடன் அவர்கள் அமர்ந்துள்ளனர்.

2 வயது பாலகன் சுர்ஜித்

ஆழ்துளை கிணற்றில் மடிந்துவிட்டான்

உலகமே கலங்கியது

ஒரு பஞ்சிளம் பாலகனை

மீட்க முடியாமல் போய்விட்டதா பாரத தேசத்தால்?

எத்தனையோ தொழில் நுட்ப வசதிகள் கண்ட

நாடாக இருந்தென்ன…! அந்த பிஞ்சு பாலகனை

காப்பாற்ற முடியவில்லையே..

எடுகின்றோம் காப்பாற்றுகின்றோம்

எனக்கூறி நான்கு நாட்களின்

பின்னர்….அழுகிபோனானாம் குழந்தை

என அறிவித்தார்கள்…!

சகல மரியாதைகளுடனும்

அடக்கம் செய்துவிட்டு

பாலகன் வீழ்ந்த குழியையும்

மூடிவிட்டார்கள்…

கதறி அழுகின்றாள் பெற்ற தாய்

எங்கு தெரியுமா? சுர்ஜித்தை

புதைத்த இடத்தில் அல்ல…!

அவன் விழுந்த குழியில்..

கருவறையில் சுமந்த

அவளிற்கு தெரியாதா?

தன் குழந்தை எங்கு உறங்குகின்றான் என…!


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like