கருணாவின் வலது கரமாக செயற்பட்டவர் ரணிலிடம் ஓட்டம்

முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாவின்) அமைச்சின் விசேட இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடாகவே பொன் ரவீந்திரன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

அது மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண வேலைகளுக்கு எல்லாம் ஐந்து லட்சம் வாங்கி விட்டு வேலை கொடுத்ததும் கொடுக்காமல் விட்டதும் யாவரும் அறிந்தது என அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

கருணாவின் காலத்தில் மட்டக்களப்பில் கொடி கட்டிப்பறந்து மக்களை ஆட்டிப்படைத்த ஆயுதக் குழுவின் முக்கியஸ்தரிற்கு திடீர் மனமாற்றம் என்பது மட்டுமல்லாது கருணாவின் அனைத்து அசைவுகளையும் அறிந்த மிக பிரதானமானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது…

அண்மைக் காலமாக ஊடகப்பரப்பில் தென்படாமல் இருந்த பொன். ரவீந்திரன் ஈசல் போன்று வெளியில் தென்படுகிறார் இனித் தான் சித்து விளையாட்டுக்கள் ஆட்டம் ஆரம்பம் என மக்கள் கதைக்க ஆரம்பித்துள்ளனர்.

இப்படியான சூழலில்…

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணத்திற்கான அதிகாரம் எனும் விடயம் சேர்க்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களுக்கான உரிமையினை வழங்குவதற்கான நல்லசமிஞ்ஞையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் பொன்.ரவீந்திரன் நேற்று மாலை மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் ஊடகசந்திப்பு நடாத்தியிருந்தார்

இதன் போது கருத்து தெரிவித்த பொன்.ரவீந்திரன்,

இம்முறை ஜனாதிபதித் தேர்தலானது மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தலொன்றாகும் இதிலே தமிழ் முஸ்லிம் வாக்குகள் மிகவும் முக்கியமானதொன்றாகவுள்ளது.

நான்பிரதிந்தித்துவம் படுத்தும் கல்குடாத் தொகுதியில் தமிழ் முஸ்லிம் உள்ளனர் அம் மக்கள்எப்போதும் சமாதானத்தை விரும்புவர்கள், யுத்தவடுக்களை தாங்கிநிற்பவர்கள் யுத்தினால் பாதிக்கப்பட்ட வாகரைப்பிரதேசம் மற்றும் கோரளைப்பற்று கிரான் உட்பட்ட படுவான்கரைப்பிரதேசமெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.

ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடுகின்ற சஜித்பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைகை;கின்றோம் நிச்சயம் அவர்இத் தேர்தலில் வெற்றிபெறுவார்.

2019யுத்ததிற்கு பின்னர் தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் நல்ல சமிஞ்சை ஏற்கனவே காட்டப்பட்டுள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படுகின்ற நிலைமையுள்ளது.

அதிகாரப்பகிர்வு அல்லது தீர்வுத்திட்டம் எனும் நகர்வை நோக்கிப்பயணிக்கின்ற அரசியலமைப்பில் மேற்கொள்ளுகின்ற தன்மை ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பல கட்ட நடைமுறைகள் நடைபெற்றுள்ளன.

சிறுபான்மை சமூகம் இந்த இலங்கைத்தீவில் அமைதியான முறையில் வாழ்வதற்கு சஜித் பிரேமதாசவின் வெற்றி மிகமுக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது.

மட்டக்களப்பில் இருக்கின்ற மக்கள் மாத்திரமல்ல வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மலையக மக்கள் மேல்மாகாண தமிழ் மக்கள் எல்லோரும் சஜித்பிரேமதாசாவின் வாக்களிக்கத்திட்டமிட்டுள்ளனர.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தபால்வாக்களிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளை எமக்கு சரியானவற்றை தெரிவுசெய்து காணி விடுவிப்பு அச்சமற்ற சூழ்நிலை எது எமக்குத் தேவை என்பதை அறிந்து நாம் வாக்களிக்க வேண்டும்.

சஜித்பிரேமதாச ஜனாதிபதியாக வருகின்றவேளையிலே நாம் எதிர்பார்த்த அனைத்தும் தீர்வுத்திட்டம் உட்பட எமக்கு கிடைக்கும்.

இன்று எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது அதில சிறபான பல விடயங்கள்குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கியத்துவமாக இலங்கையிலே சகல மக்களும் எதிர்பார்க்கின்ற விடயம் இலங்கையிலே ஒரு சமாதான தீவாக அமைவேண்டும் என்பதாகும்.அதற்கு அரசியமைப்பு மாற்றம் அவசியமாகவுள்ளது. அதிலே அதிகாரப்பகிர்வு மிக அவசியமொன்றாகவுள்ளது.

அதைப்பற்றி விரிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு இதன் மூலம் இதற்கு முன்பு கூடஇந்த மாகாணப்பகிர்வு பற்றிக்கூறப்பட்டது தற்போது அது விஞ்ஞாபனமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்கள் மாகாணங்களுக்கிடையே அதிகாரங்களை பங்கீடு செய்யும் வாய்ப்புக்கள் உள்ளது.இது தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நல்ல சமிஞ்ஞை.

இந்த தேர்தலிலே போட்டியிடுகின்ற எதிர்த்தரப்பு ஜனாதிபதிவேட்பாளர்கள் தமிழர்களின்வாக்குகளை புறக்கணிக்கின்ற ஒரு நிலைப்பாடுகூட இருக்கின்றது.

தமிழர்களின் வாக்கு இல்லாமல் இந்த தேர்தலில் வெற்றிவேண்டும் என்பதுடன் இனங்கடையே இனவாதத்தினை தூண்டுகின்ற என தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இனங்களிடையே பிணக்குகளை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தக்கால கட்டத்திலே தமிழ்தேசியக்கூட்டமைப்புக் கூட தமிழர்களுக்கான என்ன தீர்வை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கின்ற வேளையிலே நல்ல சமிக்ஞையாக இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணத்திற்கான அதிகாரம் எனும் விடயம் சேர்க்கப்பட்டுள்ளமை சிறுபான்மை சமூகத்தினை சந்தோசப்படுத்தியுள்ளது.