சஜித் தரப்புக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!

ஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களைக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கருத்து வெளியிடும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தாம் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைகள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like