ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் கோத்தபாய எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை கசிந்தது

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஊழல் எதிர்ப்பை கருப்பொருளாக கொண்டு லி குவான் யூ பாணியில் ஆட்சியை கொண்டுசெல்ல கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக எதிர்ப்புக்கு முகம்கொடுக்காமல் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருக்கும் அவர்களுக்கு எதிரான உள்ளூர் மற்றும் சர்வதேச ஊழல்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டைப் பேணுவதற்காக லீ குவான் யூ மாடலில் நம்பிக்கை வைத்திருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் யுத்த சூழல் இல்லாத நிலையில் பத்து ஆண்டுகளாக அதை பராமரிப்பது சாத்தியமில்லை என்பதால், தீர்வுகளை தேடும்போது கோதபய ராஜபக்ஷ லீ குவான் யூ மாடலுக்கு கொண்டு வந்தது அவரது நெருங்கிய ஆலோசகர் தெரண மீடியா நெட்வொர்க்கின் தலைவர் திலித் ஜயவீர.

கோட்டாபய சிங்கப்பூரில் வைத்திய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொண்டிருந்தபோது, லீ குவான் யூ தொடர்பாக புத்தகங்களை அவருக்கு வழங்கி அவரின் கவனத்தை அதில் ஈர்க்க திலித் முயற்சித்து வெற்றிபெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்த மூலோபாயத்தின்படி லீ குவான் யூ பாணியில் ஊழல் தடுப்பு திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே ஊழல் தடுப்பு திட்டத்தை செயல்படுத்தவும், எதிர்க்கட்சியையும் அவரது சொந்த கட்சியையும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களையும் கைது செய்ய கோட்டபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் பழிவாங்கும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், இந்த ஊழல் எதிர்ப்புத் திட்டத்தின் முதல் படியை நம்பத்தகுந்த முறையில் நிறுவ வேண்டுமென்றால், முதலில் தனது சொந்தக் கட்சியை சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் நன்கு அறிவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவரது பிரச்சாரத்தின் தூண்களாக கருதப்படும் பல நபர்கள் கோட்டா சகாப்தத்தின் ஆரம்ப கட்டங்களில் சிறையில் அடைக்கப்படுவது தவிர்க்க முடியாதது.