600 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தாலும் அரை மணி நேரத்தில் மீட்கலாம்.. கருவியை கண்டுபிடித்து அசத்திய மாணவர்..!

கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்க போராடியும் முடியாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க, பலரும் பல கருவிகள், ரோபோக்கள் என கண்டறிந்துள்ள நிலையில், அனைத்தையும் சுர்ஜித்தை மீட்க பயன்படுத்தியும் தோல்வியில் முடிந்த சமபவம் தான் அனைவரையும் பெருமளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரெங்கசாமிபுரம் என்ற பகுதியை சேர்ந்த மாணவன் முருகன் என்பவர் வெறும் ரூ.1000 செலவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கு ஒரு அற்புதமான கருவியை கண்டுபிடித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வம் உள்ளவர். இந்தநிலையில் சமீபத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானதை அடுத்து இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த கருவியின் மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அரை மணி நேரத்தில் மிகவும் எளிதில் வெளியே எடுத்துவிடலாம் என்றும் இதற்கான செய்முறை விளக்கத்திற்காக ஒரு குழந்தை எடையுள்ள பொம்மையை குழிக்குள் இறக்கி இந்த கருவி மூலம் அந்த பொம்மையை வெளியில் தூக்கியுள்ளார்.

மேலும் அவர் கன்டுபிடித்த கருவி மூலம் 600 அடியில் குழந்தை விழுந்திருந்தாலும் மீட்கலாம் என்றும் அவர் கூறினார். அந்த இளைஞனின் கண்டுபிடிப்பை ஒட்டுமொத்த மக்களும் பாராட்டி வருகின்றனர்.