சூடு பிடிக்கும் தேர்தல் களம்! விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல் முடிவும்வரை எந்தவொரு ஊடகத்திற்கும் நேர்காணலோ அல்லது குரல் பதிவுகளையோ வழங்க வேண்டாம் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்த உரை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலத்த சவால் ஏற்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் இந்த உத்தரவை அவருக்கு வழங்கியிருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து சர்ச்சைக்குரிய கருத்தொன்றை விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில், அது கொழும்பு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனால், தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா செய்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.