உயிருடன் விளையாடிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை…. புதைப்பதற்கு குழி தோண்டிய தாத்தா, அப்பா

இந்தியாவில் ஹைதராபாத்தில் உயிரோடு கை, கால்களை ஆட்டிக்கொண்டிருந்த குழந்தையை தாத்தாவும், அப்பாவும் குழிதோண்டி புதைக்க சென்றவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இரண்டு பேர் குழிதோண்டிக்கொண்டிருக்க இதனை ஒரு ஆட்டோ சாரதி அவதானித்துள்ளார். குழி தோண்டுவதற்கு அருகில் ஒருவர் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றுள்ளார். அந்த குழந்தை உயிருடன் இருந்ததையறிந்து பொலிசாரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

பொலிசார் வந்த விசாரிக்கையில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டிருந்தவர் அப்பா என்றும் தூரத்தில் நின்ற வயதானவர் தாத்தா என்று தெரியவந்த நிலையில், குழந்தை இறந்துவிட்டது அதனால் புதைக்க போகிறோம் எனறு கூறியுள்ளனர்.

ஆனால் குழந்தையின் அவதானித்த பொலிசார், குழந்தை உயிருடன் இருப்பதை அவதானித்து கேட்டுள்ளார். அப்பொழுது இருவரும் தனக்கு தெரியாதது போன்று பேசியுள்ளனர்.

பொலிசார் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்க இறுதியில் உண்மையைக் கூறியுள்ளனர். பெண்குழந்தையாக பிறந்த இக்குழந்தையின் பிறப்புறுப்பில் குறைபாடு இருப்பதாகவும், மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க கோரினார்கள் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பெண் குழந்தை இவ்வாறான குறைபாடுடன் பிறந்துள்ளதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர். குழந்தையின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் இதுகுறித்து அவருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.

தற்போது குழந்தையினை மீட்ட பொலிசார், மருத்துவனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் தாத்தாவும், தந்தையும் தற்போது பொலிசாரின் விசாரணையில் இருக்கின்றனர்.