சர்ச்சையை ஏற்படுத்திய கோத்தபாயவின் மகன் மனோஜ் 1 லட்சத்து 20 ஆயிரம் டொலர் விவகாரம்

வரக்காபொல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கியதேசியக்கட்சியின் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஒரே ஒரு ஊடக சந்திப்பிற்கு வந்தார். த ஹிந்து ஊடகவியலாளர் யுத்தம் குறித்து கேள்வியெழுப்பினார்.

அதற்கு கூட பதிலளிக்க முடியாமல் யுத்த வெற்றியை உலகிற்கு காட்டிக்கொடுத்தார். அங்கு தானோ, தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஸவோ யுத்தம் செய்யவில்லை, சரத் பொன்சேகாவே யுத்தத்தைச் செய்திருந்தார் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் 2009 ஆம் ஆண்டில் ” Gota’s War ” என ஒரு புத்தகத்தை எழுதினார். சரத் பொன்சேகா யுத்தம் செய்ய கோத்தபாய புத்தகம் எழுதும் யுகம் அது.

கோத்தபாய நாட்டில் யுத்தம் நடக்கும் போது புதையல்களையும், விடுதலை புலிகளின் நகைகள்,பணம் மற்றும் உடமைகளை திருடித்திரிந்தார். இதுதான் உண்மை.

இவர்கள் கொலையாளிகள், கொலை செய்வதற்கும் அஞ்ச மாட்டார்கள். பகிரங்கமாக தௌஹீத் ஜமாத்துக்கு தமது அரசாங்கம் புலனாய்வு துறையினர் எனக் கூறி அரசாங்கத்தால் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதை மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவர்கள் பதவி ஆசையில் எதை செய்யவும் அஞ்சமாட்டார்கள். இவர்கள் யாரின் உயிரையும் பறிக்க தயங்கமாட்டார்கள்.

இவர்கள் போட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கியுள்ளார்கள். 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டது கோத்தபாய ராஜபக்ஸவே.

கோட்டாவின் மகன் மனோஜ் இலங்கையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் டொலர் கொண்டு செல்லும் போது மாட்டினார். இல்லையா என மேலும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.