இலங்கையில் குழந்தையொன்றை பிரசவித்த பாடசாலை மாணவி என்ன செய்தார் தெரியுமா? முகம் சுழிக்கும் செயல்

வயிற்றுவலியென கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 18 வயதான பாடசாலை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

வைத்தியசாலையில் கழிவறைக்குள் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வெளியில் வீசியெறிந்துள்ளார். இதில் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் நிட்டம்புவ, வத்துபிடிவால ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (2) இடம்பெற்றது.

கா.பொ.த உயர்தர மாணவியொருவரை வயிற்றுவலியென குறிப்பிட்டு அவரது தாயாரும், பாட்டியும் வத்துபிடிவால ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையின் கழிவறைக்குள் சென்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார் மாணவி. அந்த சமயத்தில் தாயாரும், பாட்டியும் கழிப்பறை வாசலில் காத்திருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குழந்தையை பெற்றெடுத்ததும், கழிப்பறை யன்னல் வழியாக குழந்தையை வெளியே வீசியுள்ளார். கழிப்பறைக்கு வெளியிலிருந்த சீமெந்து தரையில் குழந்தை விழுந்துள்ளது.

பின்னர் அந்த பகுதிக்கு வந்த துப்பரவு தொழிலாளர்கள் குழந்தையை கண்டு, உடனடியாக தாதியர்களிற்கு தெரிவித்தனர். உடனடியாக குழந்தை அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை பிரசவிப்பதற்கு முதல்நாள் வரை மாணவி பாடசாலை சென்று வந்தது தெரிய வந்துள்ளது. எனினும், உடல் பிரச்சனையென கூறி, அவர் பாடசாலை சீருடையை அணியாமல் பிறிதொரு ஆடையையே அணிந்து சென்றுள்ளார்.

மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெயாங்கொடவை சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவனே கர்ப்பத்திற்கு காரணமென தெரிய வந்துள்ளது. மாணவியும், மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் இருவரும் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like