இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்ட சிறுமி மைத்திரி அருகில்! மீண்டும் வெடித்தது புதிய சர்சை..

இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்ட தன் மகளை அந்தத் தாய் தேடிக் கொண்டிருக்கின்றார்.

அவருக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு இனந்தெரியா நபர்களிடமிருந்து வருகின்றது.

உங்கள் மகள் கொழும்பில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று கொண்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அந்தத் தாய் கொழும்பு செல்ல ஆயத்தமான போது பின்னர் மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய நபர்கள் “அது உங்கள் மகள் இல்லை “என்று கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டிக்கின்றார்கள்.

பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரியால் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில் உள்ள புகைப்படமொன்றில் அந்தத் தாயின் மகள் ஜனாதிபதியுடன் நிற்கின்றார்.

இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்ட பின்னரே இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. என அந்த தாய் கூறுகின்றார்.

தன் மகளை தேடுவதிலேயே கடந்த 10 வருடங்களை அந்தத் தாய் செலவளித்தருக்கின்றார். தன் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு இந்தக் கொடூர வாழ்க்கை புரியும்.

“இது அந்த தாயின் கதை”

இந்தத் தாயின் பிள்ளை காணமல் போன பின்னர் யாருடன் புகைப்படத்தில் நின்றதோ அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து ஜனாதிபதியாக்குகின்றது.

ஆட்சியின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்ஜெட் உட்பட எல்லா விதமான ஆதரவையும் அவருக்கு வழங்குகின்றது.

ஆனால் தமிழ் மக்களுக்கு அவர் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை, ஆனால் புகைப்பட ஆதரத்துடன் உள்ள இந்த தாயின் மகள் பற்றி கண்டறிந்திருக்கலாம், அல்லது உண்மையைக் கூறியிருக்கலாம்.

இந்த ஒரு விடயத்துக்கேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

ஆனால் இவை எதுவுமே நடைபெறவில்லை.

இப்போது சொல்லுங்கள் இந்த தாயின் கோபம் நியாயமானதா? இல்லையா?

கூட்டமைப்பினரை நோக்கி, செருப்பை எறிந்து விட்டாரே என்று கோவப்படுபவர்கள் அந்த தாயின் மகளை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு என்ன பங்களிப்புச் செய்தார்கள்?

“ஒருவன் உங்கள் மீது கோபப்படுகின்றான் என்றால் அதன் காரணத்தை ஆராயுங்கள், மாறாக உங்கள் சாக்கடை அரசியலை அந்த தாயின் மீது கொட்டாதீர்கள். அழுக்கு உங்களுக்கே….