யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாளை (06 11 .2019) நடைபெறவுள்ளது.

இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின், ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C பியன்வில, தேசிய கல்வி நிறுவகத்தின்பணிப்பாளர் நாயகம் Dr. T.A.R.J.ஜெனரல் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வைக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிகளைச் சேர்ந்த 1164 ஆசிரிய மாணவர்களுக்கான பட்டங்கள், இரண்டு அமர்வுகளில் வழங்கப்படவுள்ளன.

இதன் முதலாவது அமர்வு, நாளை காலை 8 மணிக்கும், இரண்டாவது அமர்வு நண்பகல் 1 மணிக்கும் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சங்கீதம், சித்திரமே, நடனம், உடற்கல்வி, இந்து சமயம், கிறிஸ்தவம், விசேட கல்வி உள்ளிட்ட 12 பாடநெறிகளை பூர்த்தி செய்த 2012 , 2013 மற்றும் 2014 ஆம் வருட மாணவர்கள் பட்டமளித்து கௌரவிக்கப்படவுள்ளனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like