முடங்கியது ஏ9 வீதி! போக்குவரத்துக்காக தவம் கிடக்கும் வாகனங்கள்

வவுனியாவில் நேற்றைய தினம் மின்சாரத்தை துண்டிப்பதற்காக சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து இன்றைய தினம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படாத நிலையில் அத்தியாவசிய தேவையான நீர் மற்றும் ஏனைய வசதிகளின்றி மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் மின்சார சபையின் இந்த நடவடிக்கையை கண்டித்து இளைஞர்கள் பெரும்பாலானோர் இன்று இரவு ஏ9 வீதியில் தொடர்ச்சியாக நான்கு இடங்களில் வீதி மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இரவு பத்து முப்பது மணி தாண்டியும் அந்த போராட்டம் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த மின்சார துண்டிப்பால் குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்த ஏராளமான பொருள்கள் நாசமாகியதோடு வீடுகளில் மலசல கூடங்களுக்கு கூட நீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த போராட்ட வீதி மறியல் போராட்டத்தை கேள்வியுற்று ஏராளமான இளைஞர்கள் வீதியிலே ஒன்றுகூடி கொண்டிருப்பதை காண கூடியதாக இருக்கின்றது.

வீதி மறியல் போராட்டம் இடம் பெறுகின்ற இடத்திலே பொலிஸார் கூடியிருக்கின்றனர் . இதுவரை மின்சாரம் சார்ந்த எந்த ஒரு அதிகாரியும் இந்த இடத்துக்கு வரவில்லை. இது தொடர்பான எந்த விதமான முடிவுகளும் இதுவரை வீதியிலே போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஏ9 வீதி ஊடாக பயணிக்கின்ற வாகனங்கள் வீதியிலே மேற்கொண்டு போக்குவரத்தை செய்யமுடியாமல் உள்ளமையையும் காணக் கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.