இலங்கை மக்களிற்கு எச்சரிக்கை – 48 மணித்தியாலங்களில் நிகழுப்போகும் மாற்றம்

கிழக்கு- மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் அந்தமான் கடற்பரப்பிலும் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேச நிலை ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.3 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.9 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது.

இத்தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து மேற்கு – வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு – வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகம் திடீரென அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது