சஜித்திடம் சரணடைந்த ரெலோ! மகிழ்ச்சியில் செல்வம்

ஆறு மணித்தியாலயங்களிற்கு மேலாக நீண்ட விவாதங்களின் பின்னர், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற முடிவை ரெலோ எடுத்துள்ளது.

பிரத்தியேக இடமொன்றில் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் இன்று நீண்டநேர விவாதத்தை நடத்தினார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை வலியுறுத்தினர்.

பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் அபிப்பிராயப்படி, புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை ஆதரிப்பதென ரெலோவின் தலைமைக்குழு முடிவு செய்தது.

இதனால் மிகிழ்சியில் துள்ளிக் குதித்த செல்வம் அடைக்கலநாதன் இந்த செய்தியை உடன் சுமந்திரனிற்கு அறிவித்துள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சுமந்திரனின் உயர் இராஜதந்திரம் வெற்றி அடைந்துள்ளதாக மாவை சேனாதிராஜா பொதுச் செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களிடம் அரியநேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like