சுதந்திர கட்சியின் அதிரடி! சந்திரிக்கா பதவி நீக்கம்

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவை நீக்க சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிகா குமரதுங்கவிற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்தா அழகியவண்ணா குறித்த பதிவிக்கு நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் லசந்தவின் நியமனம் தற்காலிகமானது என்றும், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிரந்தரமான தொகுதி அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் சு.கவின் பதில் தலைவர் ரோஹண லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று சு.கவின் மத்தியகுழு கூடியபோது, நாம் சிறிலங்கா அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட தொகுதி அமைப்பாளர்களை நீக்கி புதியவர்களை நியமிக்க முடிவெடுத்திருந்த நிலையில் , சந்திரிகாவின் பதவி பறிக்கபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை சுதந்திர கட்சி பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாயவிற்கு ஆதரவ்ளித்துள்ள நிலையில், சந்திரிக்கா குமாரதுங்காவும் அவரது அணியினரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.