பிரான்ஸ் வீதியில் யாழ் இளைஞனிற்கு இப்படி ஒரு நிலை! உங்களிற்கு தெரியுமா? முடிந்தால் பகிருங்கள்..

இந்த வீடியோவில் உள்ளவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த சீலன். இவர் பிரான்ஸ் வந்து மனநோயாளியாக தெருவோரம் உறங்கி வருகின்றதாக அங்குள்ள ஒரு ஈழத் தமிழர் தனது முகப்புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவரிடம் பேசிய குறித்த முகநூல் வாசியிடம் குறித்த நபர் தன் பெயரை மட்டுமே கூறியுள்ளார்.

இந்நிலையில் தெருவோரம் தூங்குகின்ற தன்னித்தை சேர்ந்த ஒருவருக்கு உதவிய செய்வதற்கு அங்குள்ள ஈழத்தமிழர்களின் நெஞ்சில் ஈரமில்லையா என இந்த காணொளியினை பார்த்த பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புலம்பெயர் தேசத்தில் எத்தனையோ விழாக்களை , ஆடம்பரமாக செய்யத்த தெரிந்த நம் புலம்பெயர் சொந்தங்களிற்கு தன்னினத்தினை சேர்ந்த ஒருவருக்கு உதவி செய்ய நேரமில்லையா? அல்லது அதற்கான மனது இல்லையா?

விடுமுறைக்கு செல்லும்போதும் , நாம் இருக்கின்ற நாடுகளிலும் ஆடம்பரத்திற்காக பணத்தை அள்ளி இறைக்க தெரிந்த பலருக்கு ஒருவருக்கு உதவி செய்வதற்கு முடியாமல் இருக்கின்றார்களா? ஏன் இந்த அவல நிலை? இருபவருக்கு அள்ளி அள்ளி கொடுப்பதற்கு தான் நம்மில் பெரும்பாலானோர் விரும்புகின்றோம். ஆனால் ஆதரவற்றோரிற்கு அடைக்கலம் கொடுப்பது நமக்கு மட்டும் அல்லாமல் நம் சந்ததிக்கும் புண்ணியம் சேர்க்கும்.

வரிக்குவரி யூத இனம் யூத இனம் யூத இனம் என எள்ளிநகையாடும் நம்மில் பலரிடம் அவர்களிடம் உள்ள குணங்களில் கால்வாசியேனும் இருக்கின்றதா? என்பது வேதனைக்குரிய விடயம்.

நீங்கள் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக இருக்கவேண்டாம் நெஞ்சில் ஈரமுள்ளவராக, இரக்கம் உள்ளவராக இருங்கள். பேரும் புகழும் பெறவேண்டும் என்பதற்காக வாரி இறைக்காதீர்கள். இந்த இளைஞனைபோல் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்களிற்கு இரக்கம் காட்டுங்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பு:-

யாழ்ப்பாணத்தில் இவரது பெற்றோர், உறவுகள் யாராவது இருந்தால் தயவு செய்து 0033758646757 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த முகநூல் நண்பர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தயவு செய்து இங்குள்ள உறவுகளுக்கு எட்டும்வரை தகவலை பகிருங்கள்.