கணவரின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்து சந்தியா என்கிற 20 வயது இளம்பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஜெகதீஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாகவே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். நாட்கள் செல்லச்செல்ல சந்தியாவை, ஜெகதீஸ் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
அண்மையில் நடந்த சம்பவத்தால் கூட சந்தியா பெரும் மனவேதனைக்கு உள்ளாகியிருக்கிறார். மனசோர்வுடனே காணப்பட்ட சந்தியா, செவ்வாய்க்கிழமையன்று பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சந்தியா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவருடைய பெற்றோர் ஜெகதீஸ் மற்றும் அவருடைய தாயார் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






