கல்லூரி விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த மருத்துவ மாணவி.. இறுதி பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் மர்மமாக இறந்து கிடந்த மருத்துவ மாணவி நிமிர்தா குமாரியின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையை Chandka மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ளது.

நிமிர்தா கொல்லப்படுவதற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என பெண் மருத்துவ-சட்ட அதிகாரி டாக்டர் அமிர்தா வெளிபடுத்தியுள்ளார்.

பிரேத பிரசோதனை அறிக்கையின் படி, நிர்மிதா கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. கழுத்தில் இருந்த காயங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நிமிர்தா, கம்பி அல்லது கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மேலும், அவரது ஆடையில் இருந்த டிஎன்ஏ-வை சோதனை செய்ததில் அது ஆண் டிஎன்ஏ மற்றும் விந்து என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும், நிமிர்தாவின் உடலை சோதனை செய்ததில் அவர் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிபி அசிபா பல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வந்த மருத்துவ மாணவி நிமிர்தா, கடந்த செப்டம்பர் மாதம் 16ம் திகதி கல்லூரி விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்தார்.

இதனையடுத்து, பொலிஸ் விசாரணைக்கு முன்பே அக்கல்லூரியின் துணை வேந்தர் டாக்டர் Aneela Atta Ur Rahman, மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்தார்.

நிமிர்தா கொல்லப்பட்டதாக கூறிய சகோதரர் டாக்டர் விஷல், அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை, நிமிர்தா தற்கொலை செய்துக்கொள்ள கூடிய பெண் இல்லை என கூறினார். இதனையடுத்து, சிந்து மாகாணம் முழுவதும் மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் வெடித்த நிலையில், நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போது, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த பரபரப்பு கிளப்பும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம், இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like