தொலைக்காட்சியால் பரிதாபமாக பலியான குழந்தை; பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தொலைக்காட்சி விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,

ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்‌ஷ்மி என்பவர் நேற்று தனது 11 மாத குழந்தை மோகாரினிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.

உணவை சாப்பிட மறுத்த குழந்தை அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது வீட்டின் உள்அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் வயரை தவறுதலாக இழுத்ததில் அது குழந்தையின் மீது விழுந்தது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகளிருக்கும் வீடுகளில் இவ்வாறு அலட்சியமாக பொருட்களை வைக்காமல் அவதானமாக செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Get real time updates directly on you device, subscribe now.

You might also like