ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி-மொட்டு உடன்படிக்கை ரத்தாகும் அறிகுறி!

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக தனது முழுமையான சக்தியையும் வழங்க முடிவு செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியுற்றதால் அவர்களுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த பெரமுனவிற்கு எந்த எண்ணமும் இல்லை என வாதமொன்று அந்த கட்சியினுள் வெளிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்திரிகா பண்டாரநாயக்க ஏற்கனவே ஸ்ரீலசுக ஆசன அமைப்பாளர்கள் பெரும்பான்மையினருடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இருப்பதனால் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றாலும் ஸ்ரீலசுக எம்பி குழுவுக்கு உறுதியளித்த அமைச்சர் பதவிகளை வழங்க கூடாது என மொட்டின் பெரும்பான்மையானவர்களின் எண்ணமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேபோல் ஸ்ரீலசுக எம்பிக்களுக்கு மொட்டின் மேடையில் ஏறுவதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் மொட்டு ஆதரவாளர்கள் அவர்களை நிராகரித்துள்ளனர்.

இதனால் அவர்களுடன் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தேவையில்லை என மொட்டு தரப்பினர் வாதம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் அவர்களிற்கு 30% வேட்புமனுக்களை வழங்குவதற்கான விருப்பம் மொட்டிற்கு இல்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஸ்ரீலசுக எம்பிக்கள் குழுக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பதவிகள் எதுவும் கிடைக்காத நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எதுவும் மொட்டினால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.