இலங்கையிலிருந்து கனடா செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

இந்தியா ஊடாக நேரடி விமான சேவையை கனடாவுக்கு முன்னெடுக்க ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கனடாவின், டொரொன்டோ நகரத்திற்கு விமான பயணங்களை முன்னெடுக்கப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை, இந்திய விமான சேவையுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புது டெல்லி நகரத்தில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.

அங்கிருந்து கனடாவின் டொரொன்றோ நகரத்தில் உள்ள லெஸ்டர் பீ.பியர்ஸன் சர்வதேச விமான நிலையத்திற்கு இலகுவாக பயணிகள் சென்றடைய முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த விமானம் வாராந்தம் புதன், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது சேவையை வழங்கும்.

இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து கனடாவின் டொரொன்றோ நோக்கி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 3640 விமானமும், டொரொன்டோவில் இருந்து இந்தியாவின் புதுடெல்லியை நோக்கி, ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் – 3641 விமானமும் சேவையில் ஈடுபடவுள்ளது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like