உடைந்தது பிள்ளையானின் கட்சி! மகிழ்ச்சியில் வியாழேந்திரன்

பிள்ளையான் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்து தமிழ் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டிருந்தாலும், கிழக்கு மாகாண முதலமைச்சராக துணிவாக பணியாற்றியதாலேயே கிழக்கு மக்களில் குறிப்பிட்ட அளவிலானனோர் பிள்ளையானின் விசுவாசியானார்கள்.

இதனாலேயே பிள்ளையானினால் உருவாக்க்ப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி எனப்படும் ரி.எம்.வி.பி ஓரளவு செல்வாக்கு உள்ளதாக காணப்பட்டது.

இப்போது ரி.எம்.வி.பி கட்சியின் செலவாக்கு சரிவடைந்து போனதோடு, அதன் அடிமட்டத் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

இதற்கு காரணம் அக்கட்சியின் செயலாளர் பிரசாந்தனும் மகளிர் அணித் தலைவி செல்வியுமே என்று தொண்டர்கள் வெளியிப்படையாக கோபத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் வியாழேந்திரனிடம் அடகு வைத்த விட்டார்களே என்பதே கட்சித் தொண்டரிகளின் கோபத்துக்கு காரணமாகும்.

வியாழேந்திரன் அரசியலுக்குள் வந்து சில காலத்துக்குள்ளாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆனானவர்.

வெளிநாட்டு உறவுகளாகும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களாலும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதரத்துக்குமாக வளங்கப்பட்ட நிதிகளை சுருட்டிக்கொண்டமை, கல்வி அபிவிருத்திகென வழங்கப்பட்ட நிதிகளையும் கிராமப்புற பாடசாலைகளில் தொண்டர்களாக படிப்பித்த பிள்ளைகளுக்கு வழங்கவென அனுப்பப்பட்ட நிதிகளையும் அவர்களுக்கு வழங்காமல் அனுப்பப்பட கோடிக்கணக்கான ரூபாய்களை ஏப்பமிட்டமை,

கோவில் கட்டவென வழங்கப்பட்ட நிதியை கொள்ளையிட்டமை, பயிற்சி நிலையம் கட்ட வழங்கப்பட்ட பணத்தை ஆட்டையிட்டமை, அரச நிதியில் தனக்கும், தனது வீட்டுக்கும் கமரா, சோபா செட், தளபாடங்கள், சி,சி கமரா போன்ற ஆடம்பர சாமான் வாங்கிமை போன்ற கனவுகளை செய்ததோடு இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தில் தனக்கும் தனது மனைவியின் சகோதரிக்கும் எதிர் எதிரே மட்ட்களப்பு மான்ரேசா வீதியில் ஆடம்பர பங்களாகள் கட்டி சொகுசு வாகஙக்ள் வாங்கி உல்லாசமாக வாழ்ந்தும் வருகிறார்.

அத்தோடு பினாமிகளின் பேரில் மண் பேமிட்டுகள், கிரவல், கல் குவாரிகளை வைத்தும் களவாக உழைத்தும் வருகிறார்.

அத்தோடு நில்லாமல் தன்னோடு இணைந்துள்ள இளைஞர்களை மதுவுக்கும் மாதுக்கும் அடிமையாக்கி அவர்களை முட்டாள்களாக்கி தனது அடிமைகளாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு பல கள்ளத்தனங்கள் செய்து மக்களிடையே செல்வாக்கிழந்த வியாழேந்திரனோடு கூட்டு வைத்ததன் மூலம் தமது கட்சியின் தனித்துவத்தை பிரசாந்தனும் செல்வியும் இழக்கச் செய்துள்ளதாக கட்சியின் தொண்டர்கள் கருதுகிறார்கள்.

கோத்தபாயவின் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு தம்து கட்சி தொண்டர்களே அதிகளவில் அழைத்துக் செல்லப்படுகிறார்கள்.

ஆனால் தேர்தல் நிதியாக கோடிகளும் சொகுசு வாகன வசதிகளும் வியாழேந்திரனுக்கே வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆளுக்கொரு சொகுசு வாகனங்களில் திரிய, தாம் கோத்தபாயவின் கூட்டங்களுக்கு சோத்துப் பார்ச்சலுக்கும் ஐந்நூறு ரூபா காசுக்கும் பேருந்தில் போய் மானம் கெட்டு திரும்பி வரும் கூலிகளாக திரிவதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் பிரசாந்தனுக்கும் செல்விக்கும் வியாழேந்திரன் ஊடக் கோடிகள் வழங்கப்படுள்ளதால் அவர்கள் கட்சி தொண்டகளின் நிலை பற்றி கவலைப் படுவதில்லை.

தமது தலைவர் வெளியில் இருந்தால் தமக்கு ஏற்பட்டு இருக்காது என்று கவலை கொள்கின்றனர் கட்சியின் தொண்டர்கள்.

பிள்ளையான் வெளியே வந்தால் தங்களது கூத்துக்கு ஆப்புத்தான் என்று பிரசாந்தனும் செல்வியும் எண்ணுவதால் அவரை வெளியே எடுக்க இவர்களுக்கு விருப்பமில்லை என்று கதை அடிபடுகிறது.