பதவியின் இறுதி நாட்களில் மைத்திரி….! இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு கிடைத்த மகிழ்ச்சி

யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோனி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரை விடுதலை செய்தவற்கான ஆவணங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் இடம்பெற்ற இந்த கொலை சம்பந்தமான வழக்கில் ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளதுடன், அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

ஜானதிபதி கையெழுத்திட்ட ஆவணங்கள் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் முடிவடைதற்கு இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் ஜூட் அந்தோணி ஜயமஹாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.