யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல்குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் முடிவை பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாகஅறிய முடிகிறது.
அத்துடன்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத்தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்குஅறிவிக்கவேண்டும். அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின்அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவுசெய்தது.
மேலும்கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவு ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை தொடர்பில்இன்றைய பேரவைக் கூட்டத்தில் காரசாரமானவிவாதம் இடம்பெற்றது.
பொதுநலவழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள்சார்பில் முன்னெடுத்துவரும் வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குருபரனைநீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழு பணித்தது.
இலங்கைஇராணுவத்தின் அழுத்தத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம்பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல்குருபரன், பொதுநலம் சார்ந்த வழக்குகளில் 2011ஆம்ஆண்டு முதல் உயர் நீதிமன்றம்,மேல் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும்முன்னிலையாகி வருகின்றார்.
அத்துடன் அவர் பாதிக்கப்பட்டபலருக்கு நீதியையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர்காணாமல் ஆக்கப்பட்டதாக பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம்ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம்மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு நீதிப்பேராணை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல்செய்தார்.
இந்த நிலையில்அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்குநீதி கிடைக்கவேண்டும் என்று சட்டத்தரணி கலாநிதிகு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார்.
இந்த ஆள்கொணர்வு நீதிப்பேராணை மனுக்களில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன்முன்னிலையாவது தொடர்பிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இலங்கை இராணுவத்தால் முறையிடப்பட்டது.
அதனடிப்படையிலேயே குருபரனை நீதிமன்றங்களில்முன்னிலையாவதைத் தடை செய்யும் தீர்மானத்தைபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்திருந்தது.
இந்தக்கடிதம் கடந்த ஒக்ரோபர் மாதம்15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகதகுதிவாய்ந்த அதிகாரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதுதொடர்பில்யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக்கு அறிவிக்கும் பத்திரம் தகுதிவாய்ந்த அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்பல்கலைக்கழக பேரவை இன்று சனிக்கிழமைமுற்பகல் கூடியது.
நீண்ட விவாதத்தின் பின் சட்டத்தரணி கலாநிதிகுமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு தடை செய்யும் முடிவைஏற்று அதுதொடர்பில் அவருக்கு அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை,கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும்அவர் பிரசித்த நொத்தாரிசு பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பதுஎன்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்டவருக்கு உரிய அறிவிப்பை வழங்காதுஇழுத்தடித்தமை தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேள்விஎழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






