தாய்க்காக பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஈழத்தமிழர் செய்த நெகிழ்ச்சி செயல்!

கடுமையான நோய்க்கு உள்ளாகியிருந்த தாய் குணமாக வேண்டுமென மடிப்பிச்சை எடுத்த மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் சங்கானையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சங்கானையில் பிறந்து கடந்த 1990-ம் ஆண்டு பிரான்ஸ் சென்று தொழிலதிபராக இருப்பவர் யூட், இவரின் தந்தை இறந்த நிலையில் தாய் மற்றும் இரண்டு சகோதரர்கள் யாழில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் தாய் கடுமையான நோய்க்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்த நிலையில், தாயை குணப்படுத்த பல லட்ஷம் செலவு செய்து சிகிச்சைக்கும் உட்படுத்தியுள்ளார், அப்போதும் அவர் பூரண குணமடையாத நிலையில் இதனை தாங்கிக்கொள்ள முடியாத மகன் யூட், யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் நேர்த்தி வைத்துள்ளார்.

தனது தாய் பூரண குணமடைந்தால் யாழ்ப்பாணம் வந்து மடிப்பிச்சை எடுத்து அந்த ஆலயத்தில் பொங்கல் பொங்குவேனேனென, இவ்வாறு பல மாதங்களும் கடந்துபோனது, தாயும் மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து பெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் தாய் பூரண குணமடைந்துள்ளார்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குறித்த நபர் வீடு வீடாக சென்று மடிப்பிச்சை எடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

பிரான்சில் செல்வந்தராக இருக்கும் யூட், தாய்க்காக செய்த இந்த செயல் அவரின் குடும்பத்தினரையும், அயலவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

மடிப்பிச்சை என்றால்? இந்து சமயத்தில் ஏதாவது ஒரு விடயத்திற்காக தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டி நேர்த்தி வைத்து அது நிறைவேறும் போது, வீடு வீடாக சென்று, காசு அல்லது அரிசி கேட்டு மடியேந்தி பிச்சைகேட்டு அதில் கிடைக்கும் பணம் அல்லது அரசியை கொண்டுசென்று நேர்த்தி வைத்த ஆலயத்தில் பொங்கல் பொங்குவது, இது கால காலமாக இந்து சமயத்தவர்களால் பின்பற்றிவரும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.