காட்டில் மாயமான யாழ் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

வவுனியா வடக்கு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் காட்டிற்கு சென்றபோது மாயமாகியிருந்தார்.

இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்தவேளை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் கனகராயன்குளம் பொலிசாருக்கு முறைபாடு வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதி இளைஞர்கள், விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை சடலாமக மீட்கபட்டுள்ளார்.

குறித்த மாணவன் காட்டுற்குள் கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் நீதவானின் வருகையின் பின்னர், மருத்துவ சோதனைக்காக வைத்திசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள நிலையில் , கனகராயன்குளம் பொலிசார் சம்பவம் தொர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like