சஜித் ஜனாதிபதியானால் இலங்கையருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞர் யுவதிகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தெரிவாகிய பின்னர் நாடு முழுவதிலும் இளைஞர் யுவதிகளுக்கு இலவச இணையத் தரவு சேவையை (FREE DATA INTERNET ) வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

நாடு முழுவதிலும் தற்போது காணப்படுகின்ற 4G இணைய வசதியை மேம்படுத்தி 6G இணையச்சேவையை விரைவில் வழங்குவதாகவும், அதற்காக சஜித் பிரேமதாசவை இளைஞர் யுவதிகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like