கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்கள் எவரும் குறித்த நேரத்திற்கு வருகை தராமையினால், ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின்படி விடுதலைப் புலிகளின் புரட்சி பாடல் திடீரென ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இதன்போது கல்முனை பொலிஸாருக்கு குறித்த விடயம் அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிஸார், சந்தேகத்தில் குறித்த கூட்டத்திற்கு ஒலிபரப்பு ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை கைது செய்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த ரெலோ இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like