ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் போலியாக பரப்பப்படும் ஜோதிடத் தகவல்கள்! உண்மை நிலவரம் என்ன?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜோதிடம் என்ற பெயரில் பல போலியான தகவல்கள் பரவி வருவதாக பிரபல ஜோதிடர் நுமிந்த ஷாந்தசிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இனவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் சிலர் ஜோதிடத்தை மாற்றி மக்களை பிழையாக வழி நடத்துகின்றமையினால் ஜோதிடம் தொடர்பில் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜோதிடத்தை மாற்ற முடியாது. எங்கள் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் வேட்பாளர்கள் தொடர்பிலும் ஜோதிடர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

இந்த தவறுகளை சரிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் யார் என்பது தொடர்பில் கூறவே ஜோதிடர்கள் சிலர் ஒன்றாக இணைந்துள்ளோம்.

நாங்கள் எந்தக் கட்சிக்கும் சார்பானவர்கள் அல்லது. நாங்கள் கற்ற ஜோதிடத்திற்கமையவே நாங்கள் சார்பாக செயற்படுவோம். அதற்கமைய சஜித்திற்கு, 2024ஆம் ஆண்டிற்கு பின்னரே ராஜயோகம் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like