மீண்டும் தலைவராகும் மைத்திரி!

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவார் என பதில் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க கூடாதென அழுத்தம் பிரயோகித்தனர்.

சுதந்திர கட்சியில் பலர் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தார்.

அதற்கமைய தேர்தல் முடியும் வரை சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.

அதற்கமைய ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தயாராகி வருவதாக பதில் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஜனாதிபதியினால் எதிர்வரும் கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.