யார் வெற்றி பெற்றாலும் ஜனாதிபதி ஐதேகவின் ஒருவரே..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புலனாய்வு பிரிவினரது தகவல்களின்படி சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். எனவே சஜித்தின் வெற்றி உறுதியானதாகும். 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று சஜித் இலங்கையின் 7வது ஜனாதிபதியாக பதவியேற்பார்.

தற்போதைய கள நிலவரம் இப்படி இருந்த போதிலும் கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவானவர்கள் 70 சதவீத வாக்குகள் தமக்கு கிடைக்கும் என பிரசாரம் பண்ணி வருகிறார்கள். அது மொட்டு கட்சியின் ஆதரவாளர்களை ஆறுதல்படுத்த சொல்லும் வார்தையென்ற போதிலும் எப்படி இருந்தாலும் கோத்தபாயவால் இலங்கையின் ஜனாதிபதியாக தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதியாக பதவியேற்க முடியாது.

ஒருவேளை அதிக வாக்குகளை பெற்று மொட்டுக் கட்சியினர் சொல்வது போல கோத்தபாய ராஜபக்ச அதிக வாக்குகளை பெற்றால் கூட இலங்கையின் ஜனாதிபதியாக அவரால் முடியாது.

அவர் அமெரிக்கா மற்றும் இலங்கை நாடுகளின் இரட்டை குடியுரிமை (டுவல் சிட்டிசன்) உள்ள ஒருவர் என்பதால் அப்படியான ஒருவரால் இலங்கை அரசியல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியாக மட்டுமல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட பதவியேற்க முடியாது.

இதற்கு முன்னர் மஹிந்த ஆதரவளாரான சுதந்திரக் கட்சியின் நடிகை கீதா குமாரசிங்கவினது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இப்படியான இரட்டை குடியுரிமை பிரச்சனையால் பறிபோனது. அவர் சுவிஸ் – இலங்கை இரட்டை குடியுரிமை உள்ளவராக இருந்தார்.

அதுபோல கோத்தபாய தனக்கான அமெரிக்க குடியுரிமையை இல்லாதாக்கியுள்ளார் என நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது போனால் அவரால் ஜனாதிபதியாக பதவியேற்க முடியாமல் போகும்.

அதை அவர் இன்னும் முழு ஆதரத்துடன் வெளியிடவில்லை. அதேசமயம் இந்தவிடயம் குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமோ அல்லது அமெரிக்க அரசோ கூட எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியான ஒரு நிலை ஏற்படின் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் இலங்கையின் பிரதமரே நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பார். அதனடிப்படையில் ரணில் ஜனாதிபதியாவார்.

எனவே சஜித் வெற்றி பெற்றாலும் , தோற்றாலும் இறுதியில் ஜனாதிபதியாவது ஐதேகவின் ஒருவர் என்பதுதான் நடக்கப் போகிறது.