யாழ் கரவெட்டி வைத்தியசாலையில் சிக்கினார் வைத்தியர்

தமிழ் பொது வேட்பாளர் எம்.ஏ.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில், இன்று (15) கடமைநேரத்தில் வைத்தியர் ஒருவர் ஈடுபட்டார்.

கரவெட்டி ஆதார வைத்தியசாலையில் இன்று நீரிழிவு, குருதியழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான மாதாந்த பரிசோதனையின்போது இந்த பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு நோயாளிகளுடனும் நீண்டநேரம் செலவிட்ட வைத்தியர், யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என வினாவி, சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கும்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அத்துடன், சிவாஜிலிங்கத்தின் துண்டுபிரசுரங்களையும் ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கினார்.

தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிந்துள்ளது. அத்துடன், அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறிப்பிட்ட வைத்தியர் நோயாளிகளுடன் மரியாதை குறைவாக நடப்பதாகவும் நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது.

வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருமையில், அதட்டி பேசுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் வயதான நோயாளிகள் பலர் மனஉளைச்சலிற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.