ஐ.தே.கவில் ஏனையோரும் பதவி விலக வேண்டும்..? மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி ஒரு கட்சியிலும் அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிடவில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற மத வழிபாட்டின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே சிறந்தது. தற்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே உள்ளது. ஜனாதிபதி ஒரு கட்சியிலும், அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது.

தற்போது அமைச்சரவையில் இருந்து சிலர் விலகியுள்ளனர், அதேபோல மக்கள் ஆணையை ஏனையோரும் ஏற்று பதவி விலகுவார்கள் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.