கொழும்பில் இன்று கோத்தபாய ராஜபக்க்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக தனது பொறுப்புக்கை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் புதிய ஐனாதிபதியின் வரவேற்பு நிகழ்வானது பாதைகள் மூடப்படாமல் வெகு சாதாரணமாக நடைபெற்றதாக பலரும் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு துறையில் அரசாங்கம் எந்தளவு ஸ்திரமாக இருக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு இது காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் மக்களின் பாதுகாப்பையும், அவர்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புக்களையும் செலுத்தாத அரசாங்கமாக புதிய அரசாங்கம் அமையும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதாக பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.