பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்ததை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன், இன்று பிற்பகல் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நியமிக்கப்படவுள்ளதாகவும் அரியக்கிடைத்துள்ளது.
மேலும் அதன் பின்னர், 16க்கும் குறைவாக உறுப்பினர்களை கொண்ட காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






