திகன சம்பவம் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய விசாரணை – 24 பேர் கைது

பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் இனவாத மதவாத பிரச்சாரங்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போத சமீத்திய திகன தெல்தெனிய சம்பவம் தொடர்பாக அமைச்சரவை துணைப்பேச்சாளரும் சுகாதாரபோசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

சமூக இணையத்தளங்களின் ஊடாக இவ்வாறான வன்முறைகளை தூண்டுவதற்கு நபர்களை அறிந்துகொள்வதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் சமூக இணையத்தள செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

பொதும்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திகன தெல்தெனிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 என்று பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது பல உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களுள் இரண்டு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்களும், மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் ,பௌத்தபிக்கு ஒருவரும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயலாளர் ஓருவரும் இதனை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த கிராமத்தில் உள்ளவர்கள் எவரும் நேரடியாக தெரடர்புபடவில்லை திட்டமிட்டு தொலைவில் இருந்து வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இவர்கள் இங்கு வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய தேர்தலில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்களின் ஆதரவை பெறமுடியாதவர்களே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இவர்கள் தொடர்பான விபரங்களை கூடிய விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.