வடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்?

வட மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அதற்கமைய ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரேவும், மேல் மாகாண ஆளுநராக சீதா அரம்பேபோல நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸ்ஸமிலும்,சப்ரகமுவ ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகேவும், தென் மாகாண ஆளுநராக வில்லி கமகே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் , வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக கூறபப்டுகின்றது.

எனினும் வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் பரந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது .