சபாநாயகருக்கு நாற்காலி, பைபிள் வீசி​யோர் புதிய அமைச்சரவையில்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை தொடர்பிலான விமர்சனங்கள், புகைப்படங்களுடன் சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதியால் நியமிக்கபட்ட அமைச்சரவையில், தமிழர்களான ஆறுமுகன் தொண்டமான், மற்றும் டக்ளஸ் தேவானந்த ஆகியோரும் உள்ளடங்குகின்றர்.

அத்துடன் அமைச்சரவையில் என்றுமே அங்கம் வகிக்காத, வைத்தியர் ரொமேஸ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் அங்கம் வ​கித்துள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதேவேளை கடந்த 2018 ஒக்டோபர் 18ஆம் திகதியன்று இடம்பெற்ற, ஆட்சி மாற்றத்தின் போது பாராளுமன்றத்தில் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கப்பட்டபோது, ஏற்பட்ட பிரச்சினையில், 21 பேருக்கும் மேற்​பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டபோதும் , எவருமே நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், சபாநாயகரை நோக்கி க​திரையை வீசியவர், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அவர் புதிய அமைச்சரவையில் வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளதாக விசனம் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, சபாநாயகரை நோக்கி, பைபிலை வீசி எறிந்த விமல் வீரவன்ச, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவம். அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது குறித்த சம்பவத்துடன் கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like